எல்லோராலும் அனைத்தையும் சாதிக்கக் கூடிய வல்லமை உள்ளது என்கிறார் – நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கமல்ராஜ்.
எல்லோராலும் அனைத்தையும் சாதிக்கக் கூடிய வல்லமை உள்ளது. அதனை அடைவதற்கு நாம் ஒவ்வாருவரும் மேற்கொள்ளும் முயற்சியிலும், பயிற்சியிலும்தான் தங்கியுள்ளது. தொடற்சியான பயிற்சி, தொடற்சியான முயற்சிக்கூடாக இலக்குகளை அடைந்து கொள்ளலாம். போட்டிப் பயிற்சிகளில் அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பல முயற்சிகளை முன்நெடுக்கும் மாணவர்களுக்கு சமூகமும் அவர்களாலான உதவிகளையும் ஒத்தாளைகளையும் வழங்கும் பட்சத்தில்அது அவர்களுக்கு மேலும் உந்துகச்கத்திளளிக்கும்.
அத்துடன் தத்தமது சமூகம் சார்ந்து சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, சமூகத்திற்குச் சேவைசெய்யக்கூடிய மனப்பாங்குகளையும வளர்த்தெடுக்க வேண்டும். என இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு மாட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற சில்வஸ்ட்டர் கமல்ராஜ் தெரிவிக்கின்றார்.
கடந்தமுறை நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சில்வெஸ்றர் கமல்ராஜ். ஆகிய இவர் ஒரே ஒருவர் மாத்திரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மனிதன் தன் வாழ்வில் கற்கின்ற கல்வியும் ஒருவருடைய முயற்சியும் ஒருவரை வாழ்வில் முழுமையான நிலைக்கு உயர்த்துகின்றது. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது ஒளவை வாக்கு. ஆக, நாம் பொருள் படைத்திருக்காவிடிலும் கல்விச் செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்று புலப்படுகிறது.
கல்வி அதிகாரத்தின் முதல் குறளாக அமைவது, “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” (குறள் 391) என்ற குறளாகும். நாம் பெற்ற அச்சீரிய கல்வி வெறுமனே ஒரு அறிவாக நிலைத்துவிடாது அதனை நம் வாழ்வின் பின்பற்றினோமேயானால் நம் வாழ்வு மென்மேலும் மேன்மையடையும் ஆதலால் இக்குறள் வழி நாம் நடப்பது உசிதமாகும் எனலாம்.
கல்வி என்பது ஒரு மனிதனின் வாழவை நெறிப்படுத்துகிறது. எனவே தான், கிரேக்க அறிஞர் “பிளட்டோ”, “கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்” என்றார். ஏனென்றால், கல்லாமைதான் தீவினையின் மூலவேர் என்று விளக்கியிருக்கிறார். ஆகவே, இக்கூற்றின் வழி கல்வியே நல்வழிக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கு சான்று பகற்கும் வகையில் கல்வியினால் சாதிக்கும் மாணவர்களும் நம்மவர் மத்தியில் இருக்காத்தான் செய்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்து இயற்றை எழில் கொஞ்சும் நில வளமும் நீர்வளமும் ஒருங்கே நிறைந்த கிராமம் மண்டூர் கிராமம். இக் கிராமத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கிறார் சில்வெஸ்றர் கமல்ராஜ்.
தேசிய ரீதியில் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக ஆகஸ்ட் மாதம் 02 திகதி நியமனம் பெறவுள்ளார்.
இரண்டு சகோதரர்ளையும், மருத்துவ பட்டத்தினை பூர்த்தி செய்த சகோதரி, வவுனியா பல்கழைகலைக் கழகத்தில் கல்வியை தொடரும் சகோதரி என இரு சகோதரிகளை கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை கமல்ராஜ். இவருடைய தந்தை சில்வெஸ்றர் ஓர் விவசாயி. தாய் விஜயலெட்சுமி ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் பெருமையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் கமல்ராஜ்.
தனது ஆரம்ப பாடசாலை கல்வியை மண்டூர் மகா வித்தியாலயத்தில் பூர்த்தி செய்த இவர். உயர்தர கலைப் பிரிவில் சித்தியடைந்து கிழக்கு பல்கழைக்கழத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். பின்னர் பொலனறுவை முத்துக்கல் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியதுடன் தொடர்ந்து களுதாவளை தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார்.
0 Comments:
Post a Comment