கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு தன்னார்வத் தொண்டு அமைப்புக்களால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு.
கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்திச் சங்கம் ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புற்றுநோய் உதவி சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து புதன்கிழமை (21) வழங்கிவைத்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களையும் வைத்திய துறை சார்ந்த சுகாதார சேவையாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் மேற்படி உபகரணங்கள் கல்முனை கொரோனா சிகிச்சை நிலையத்தி்காக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வட்ஸ் யூ.கே சங்கத்தின் நிதி உதவியில் வட்ஸ் மட்டக்களப்பு கிளை ஊடாக கொவிட் பாதுகாப்பு மேலங்கிகள்> என்.95 முகக்கவசங்கள்> ஏனைய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இந் நிகழ்வில் கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன்> வைத்தியசாலையின் பிரதி வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் சோ.திருமால்> தாதியபரிபாலகர் எஸ்.சஜிந்திரன்> பராமரிப்புப்பிரிவு உத்தியோகத்தர்கள்> வட்ஸ் மட்டக்களப்பு கிளை ஆலோசகர்களான> அக்கரைப் பாக்கியன்> சர்வானந்தா வட்ஸ் மட்டக்களப்பு கிளை உறுப்பினர் கிருஷ்டி> இணைப்பாளர் தர்சினி மற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற உதவிகளை தன்னார்வ அமைப்புக்கள் முன்வந்து வழங்கும்போது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு அது பெரும் உதவியாக அமையும் என இந் நிகழ்வில் கலந்துகொண்ட கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment