வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
கொரோனா தாக்கத்தால் அன்றாடம் நாட்கூலி வேலைசெய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை(11) அரிசி, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சமூக சேவையாளர், மே.வினோராஜ் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இந்த உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
கொரோனா அச்சத்தின் காரமாக மக்கள் வருமானமின்றி இன்னலுறும்போது எமது நிலமை அறிந்து தாமாக முன்வந்து மனமுவந்த காலடிக்கே கொண்டுவந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றிளைத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment