11 Jul 2021

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

SHARE


வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நாடாளாவிய ரீதியில் நேற்று (10) ஆந் திகதி காலை 10 மணிக்கு தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு வந்தாறுமுலையில் பகுதியில் மற்றுமொரு அங்குரார்ப்பன நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி.பிறேமினி ரவிராஜ் தலைமையில் ஏறாவூர்ப்பற்றிற்கான வந்தாறுமுலையில் உள்ள இராஜாங்க அமைச்சரின் பிராந்திய  பணிமனை வளாகத்தில் இடம்பெற்றது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் கே.கருணாகரன், எறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகளின் உரையைத் தொடர்ந்து,  250 பயனாளிகலுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் வழங்கிவைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் உத்தியோகத்தர்களினால் குறித்த பணிமனை வளாகத்தில் தென்னை நடுகை முறை சம்மந்தமான பயிற்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: