9 Jul 2021

களுதாவளையில் விபத்து 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.

SHARE

களுதாவளையில் விபத்து 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்புகல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் வியாழக்கிழமை(08) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 3 பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

களுதாவளையிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், கல்லாறு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோத்திக் கொண்டத்தில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பெண் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்நெடுத்துள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: