5 Jul 2021

களுவாஞ்சிகுடியில் கொவிட் - 19 சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

SHARE

 

களுவாஞ்சிகுடியில் கொவிட் - 19 சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் - 19 சிகிச்சை நிலையம் வெள்ளிக்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடானுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ..எம்.தௌபீக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், ஏனைய வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தினர், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்த கொண்டிருந்தனர்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் இது 3 வது கொவிட் - 19 சிசிக்சை நிலையமாக இதுதிறந்து வைக்கப்பட்டுள்ளது. 50 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறக்ககூடிய இச்சிகிச்சை நிலையத்திற்கான மருத்துவ உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ..எம்.தௌபீக், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திரநாதனிடம் கையளித்தார்.












 

SHARE

Author: verified_user

0 Comments: