5 Jul 2021

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்.

SHARE

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்.

கிழக்கு மாகாண ஆளுனர், சுகாதர அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவருடனும் ஒன்றிணைந்து கிழக்கு மகாணாத்தீலுள்ள வைத்திய சாலைகளுக்கு சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றோம்இந்நிலையிலும் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடாகவுள்ளது. ஒட்சிசன் சிலின்டர் மிகவும் கஸ்ற்றப்பட்டுதான் 100 சிலிண்;டர்களைக் கொண்டு வந்துள்ளோம். என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ..எம்.தௌபீக் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் - 19 சிகிச்சை நிலையம் வெள்ளிக்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்iயில்

கிழக்கு மாகாணத்தில் அனைவருக்கும் வைத்திய வசதிகள் நிறைவாக இருக்க வேண்டும் எனும் நோக்குடன்தான் கிழக்கு மாகாணத்திற்கு நான் வந்தேன். கிழக்கு மாகணத்திலுள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் கஷ்ற்ற நிலையில் உள்ளார்கள், நானும் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் இப்பிரதேச மக்களின் நாடித்துடிப்பை நன்றாகத் தெரிவும்.

கிழக்கிலுள்ள அனைத்து வைத்திசயாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை விஸ்த்தரித்து, ஸ்த்திரப்படுத்த வேண்டும் அதற்கான வைத்திய உபகரணங்களும், வைத்தியர்களும். வைத்தியசாலைகளில் இருந்து கொண்டு சேவைசெய்ய வேண்டும். என்ற கனவில்தான் நான் கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வந்தேன். தற்போது கொவிட் - 19 இனால் எனது கனவு வைத்தியசாலைகளின் தேவைகள் பல பூர்த்தி செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வரப்படுகின்றன. குறிப்பாக கொவிட் - 19 இனால் தீமைகள் இருந்தாலும் வைத்தியசாலைகளும் அபிவிருத்திகள் செய்யப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் எந்த வைத்தியசாலைகளிலும் .சி.யு வசத்திகள் இருக்கவில்லை. நான் கிழக்கிற்கு வந்ததும் அனைத்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து 13 வைத்திய சாலைகளில் அவசர வைத்திய பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். என தீர்மானித்திருக்கும் போதுதான் கொவிட் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச்செயற்றிட்டங்களை கிழக்கு மாகாண ஆளுனர், சுகாதர அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவருடனும் ஒன்றிணைந்து சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கி நாம் இச்செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  இந்நிலையிலலும் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடாகவுள்ளது. ஒட்சிசன் சிலின்டர் மிகவும் கஸ்ற்றப்பட்டுதான் 100 சிலிண்டர்களைக் கொண்டு வந்துள்ளோம். என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 





SHARE

Author: verified_user

0 Comments: