8 Jun 2021

பயணத்தடை நேரத்தில் வேட்டையாடப் பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த யானைக் குட்டியை காப்பாற்றிய வன அதிகாரிகள்.

SHARE

பயணத்தடை நேரத்தில் வேட்டையாடப் பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த யானைக் குட்டியை காப்பாற்றிய வன அதிகாரிகள்.

வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த ஒரு வயது நிரம்பிய யானைக் குட்டியை பயணத்தடை நேரத்தில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நீண்டநேர போராட்டத்தின் பின்னர் வன அதிகாரிகள் காப்பாற்றிய சம்பவமொன்று மட்டக்களப்பு வடமுனை காட்டுப்குதியில் இடம் பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியில் காயமடைந்த குறித்த யானைக் குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டாரவின் வழிகாட்டலில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுற்று வட்ட அதிகாரி நாகராஜ் சுரேஸ்குமார் தலைமையிலான வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட யானைக் குட்டியை அம்பாறை மாவட்ட மிருக வைத்தியதிகாரி எம்.புஸ்பகுமார உடனடி வைத்திய வசதிகளைச் செய்து அம்பாறை வனவள திணைக்களத்திற்கு எடுத்துச் சென்று முழுமையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: