மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதான வீதியில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற விபத்தில் எருமை மாடு ஒன்று இஸத்தலத்திலேயே உயிரிழந்துள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…மண்டூர் பக்கமிருந்து பாலமுனை பக்கமாக மிகவும் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தவேளை திடீரென் குறுக்கிட்ட எருமை மாட்டின்மீது மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக அயலிலுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் குறித்த எருமை மாடு ஸ்தலத்திலேய உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்களில் பயணித்தவர் படுகாயமைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment