இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் துப்பாக்கிச்சூட்டு ஒருவர் மரணம்.
இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மட்டக்களப்பு - சின்ன ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என தெரியவருகின்றது.
0 Comments:
Post a Comment