கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கைக்குரிய உள்நாட்டு மருத்துவ முறைகளில் (Indegenous Medicine) சித்த மருத்துவமும் ஒன்று இது தமிழர்களால் பின்பற்றப்படும் மருத்துவ முறையாகும்.
குருகுல முறைப்படி கற்பிக்கப்பட்டு வந்த இந்த மருத்துவம் பல்கலைக்கழக அந்தஸ்த்துக்கு தரம் உயர்த்தப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகம், சுதேச மருத்துவ நிறுவனத்தின் (Institute of Indegenous Medicine) கீழ் ஒரு துறையாக (Department of Siddha Medicine) இருந்து வந்தது அதன் பின்பு இத்துறையானது யாழ்
பல்கலைக்கழகத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டு 30 வருடங்களிற்கு மேல் சித்த மருத்துவம் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான காலஞ்சென்ற செல்வி தங்கேஸ்வரி அவர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் சித்த மருத்துவ துறை ஆரம்பிப்பதற்கான சிபாரிசை பெற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 2008ம் ஆண்டு சித்த மருத்துவ கற்கைநெறியானது திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகத்தால் ஒரு சித்த மருத்துவ அலகாக (Unit of Siddha Medicine) 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 13 வருடங்கள் கடந்த நிலையில் இன்று 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
திருகோணமலை வளாக முதல்வர் (Rector) பேராசிரியர். வல்லிபுரம்
கனகசிங்கம்
அவர்களின் அயராத கடின உழைப்பாலும் முன்னாள் மற்றும் தற்போதைய
துறை தலைவர்களின் முயற்சியாலும் இவ் அலகானது இன்று இலங்கையில் முதலாவது சித்த மருத்துவ
பீடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.
திருகோணமலை வளாகத்தால் கற்பிக்கப்பட்டு வரும் இக் கற்கை நெறியானது பல தனிச்சிறப்புகளை
தன்னகத்தே கொண்டு சிறந்த சித்த மருத்துவ வைத்தியர்களை உருவாக்கி எமது நாட்டின் சுகாதார
துறைக்கு பெரிதும் பங்களிப்பு செய்து வருகின்றது.
1. ஆங்கில மொழியில் இக் கற்கை நெறி கற்பிக்கப்படுவதால்
எல்லா
இனத்தவரும் எமது பாரம்பரிய கற்கை நெறியை கற்கும் வாய்ப்பு
உள்ளதுடன்
ஆய்வுகளை இலகுவாக செய்ய கூடியதாகவும் உள்ளது. இவ் ஆய்வுகளை
உலகளாவிய ரீதியில் நடைபெறும் ஆய்வு மாநாடுகளில் சமர்ப்பித்து
இவ்
உள்நாட்டு கற்கை நெறியானது சர்வதேச அங்கீகாரத்தை பெற ஏதுவாக
உள்ளது.
2. சித்த மருத்துவ பாட நெறியானது முதன்முதலாக Semister
system இல்
கற்பிக்கப்பட்டு வருவதால் இத் துறையால் வழங்கப்பட்டு வரும்
பட்டமான
BSMS ஆனது மிகவும் தகுதியானதாக பட்டப்படிப்பாக காணப்படுகின்றது.
3. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த Research
Laboratory இருப்பதால்
மாணவர்க்கும், விரிவுரையாளர்களும் ஆய்வுகளை மேற்கொள்ள வழி
வகை
செய்யப்பட்டுள்ளது.
4. அத்துடன் சித்த மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கும்
கற்பதற்கும்
தேவையான மூலிகை தோட்டமானது (Herbal Garden) இரண்டு ஏக்கர்
விஸ்தீரமான நிலப்பரப்பில் கற்றல் கற்பித்தலுக்கான ஆளணி
தளத்தையும்
கொண்டிருக்கின்றது.
5. சித்த மருத்துவ பாட நெறியானது (Syllabus) சித்த மருத்துவத்தில்
அடிப்படை
தத்துவங்களை (Basic Principles) உரிய முறையில் உள்ளடக்கியிருப்பதுடன்
இன்றைய காலத்தின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில்
வடிவமைக்கப்பட்டு உள்ளது.
6. சித்த மருத்துவம் சார்பான விழிப்புணர்வை இலங்கை வாழ்
மக்களிற்கு
ஏற்படுத்துவதற்கான ஆய்வுகள் செய்யப்படுவதுடன் இவற்றின்
முடிவுகளை
மக்களிற்கு காட்சிப்படுத்தி (Exhibition) சுகாதார முறைகள்
சம்பந்தமான
அறவினை( Health Education campaign) மக்களிடம் சென்று விளங்கப்படுத்தி
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
7. 2019/2020 கல்வி ஆண்டுக்கான வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்ட
மாணவர்களில் 125 மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால். சித்த மருத்துவம் கற்பதற்காக அனுமதிக்கப்பபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment