8 Jun 2021

மட்டக்களப்பில் பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து மீண்டும் திருப்பி அனுப்பியுள்ள பொலிசார்.

SHARE

மட்டக்களப்பில் பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து மீண்டும் திருப்பி அனுப்பியுள்ள பொலிசார்.

மட்டக்களப்பில் விசேட வீதிச்சோதனை நடவடிக்கை திங்கட்கிழமை (07) பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதற்கு அமைய மட்டக்களப்பு கல்லடிப் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருப்பதுடன்> வீதிகளில் பயண அனுமதிப்பத்திரம் இன்றி அனாவசியமாக பயணிப்போர் இனங்காணப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறாக அரசினால் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைப்பிடிப்பார்களேயாயின் மிக விரைவில் மாவட்டத்தையும் நாட்டையும் விட்டு கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: