மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அடங்கிய தொகுதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரனிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கொவிட் நிலையினை தொடர்ந்து கள அலுவலர்களாக கிராமப்புற கள கடமைகளில் ஈடுபடும் அரசு உத்தியோகத்தர்களின் சுகாதார பராமரிப்புக்காக சுகாதார உபகரணங்களை வட கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்கிவரும் Street Child மற்றும் Beds ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்தே முகமூடிகள், கிருமிநாசினிகள் மற்றும் சவற்காரம் உள்ளிட்ட பொருட்களை இவ்வாறு கையளித்துள்ளனர்.
இதன்போது முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், திட்டமிடல் பணிப்பாளர் பு.சசிகலா, மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளான ஏ.கஜேந்திரன், டிராஜ் டொமினிக் உள்ளிட்ட மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment