9 Jun 2021

மட்டு.மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

SHARE

மட்டு.மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு  கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்--700 பேருக்கு சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் முதல் கட்ட பணிகளில்  புதன்கிழமை (09) மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் கட்டமாக சினோ பாம் ரகத்தைச் சேர்ந்த   தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா கல்லடி மஞ்சந்தொடுவாய் பாடசாலைகளில் இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தொடர்ந்தும் தடுg;பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 












SHARE

Author: verified_user

0 Comments: