12 May 2021

குருக்கள்மடத்தில் பாரிய விபத்து ஒருவர் மரணம் மற்றுமொருவர் பலத்த காயம்.

SHARE

குருக்கள்மடத்தில் பாரிய விபத்து ஒருவர் மரணம் மற்றுமொருவர் பலத்த காயம்.

மட்டக்களப்புகல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தேவாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை(21) மாலை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து சென்ற பேருந்தும், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்படுகையில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு உடன் விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தலைமையிலான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டி முற்றாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த சாரதி உட்பட்ட மூவரும் பயணித்துள்ளனர் அதில் சாரதி மரணமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருபெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாவைலக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றய பெண் எதவித காயங்களுமின்றி தெய்வதாதீனமாக உயிர் பிழைத்துள்ளார் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவர் 49 வயதுடைய கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த அ.மதிராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: