வவுணதீவில் சட்டவிரோதமான முறையில் மண் கடத்திய நால்வர் கைது-இரு உழவு இயந்திரங்களும் மீட்பு.
சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை மட்டக்களப்பு வவுணதீவு பொலிசார் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த தெரிவித்தார்.சனிக்கிழமை (03) அதிகாலை வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சனங்குடா குறுஞ்சியடி
மும்மாரி குளத்தில் சட்டசவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த
நால்வரை வவுணதீவு பொலிஸார் கைது கைது செய்துள்ளனர். இவர்களுடன் மணல் நிரப்பபட்ட இரு
உழவு இயந்திரங்களும் சில உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான நபர்களும் உழவு இயந்திரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக
பொலிசார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment