மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே உடற்பயிற்சி கழகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு.
மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே உடற்பயிற்சி கழகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கல்லூரியின் பிரதான போதனாசிரியர் கே.ரீ.பிரகாஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதனைத்தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்விற்கான வரவேற்புரையினைத் தொடர்ந்து ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உடல் கட்டுமானப் போட்டியொன்றினை இவ்வாண்டிலிருந்து அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் இதன்போது அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குறித்த கழகத்தின் தலைவரும் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமான கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர உறுப்பினர் க.ரொனி பிறின்சன் உள்ளிட்ட கழகத்தில் பயிற்சிபெறும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment