8 Apr 2021

மட்டு.மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால் மக்கள் பெரும் பாதிப்பு—அதிக நீரை அருந்துமாறு வைத்தியர்கள் கோரிக்கை.

SHARE

மட்டு.மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால் மக்கள் பெரும் பாதிப்பு—அதிக நீரை அருந்துமாறு வைத்தியர்கள் கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சூரியன் நடுஉச்சியில் தோற்றம் கொடுப்பதாலும் வரட்சியான காலநிலை ஆரம்பித்துள்ளதாலும் கடுமையான வெப்பமான காலநிலை நிலவிருகின்றது.இதனால் பொது மக்கள் பல்வேறு கஸ்டங்களை  அனுபவித்து வருகின்றனர்.

கடுமையான வெப்பம் காரணமாக வியர்க்குரு வெப்பச்சோர்வு தலையிடி மயக்கம் மனோநிலை மாற்றம் உட்பட பல நோய்கள் ஏற்படுவதாகவும் அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்க ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு லீட்டர் தண்ணீரை அருந்த வேண்டுமெனவும் கடும் நிறமான ஆடைகளை அணிவதை நிறுத்தி இலகுவான ஆடைகளை அணிய வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன்  தெரிவித்தார்.

கடும் வெப்பத்தைத் தணிக்க பச்சைத் தோடைகள் மற்றும் செவ்விளநீர் அத்துடன் பச்சைக் கீரைகளையும் பொது மக்கள் அதிகமாக உட்கொண்டு வருகின்றனர்.

அதிகமான பொதுக்கள் குடைகளைப் பிடித்தே நடமாடி வருவதையும் காணமுடிகின்றது.











 

SHARE

Author: verified_user

0 Comments: