5 Apr 2021

மோதல் தீர்வுக் கற்கைகள் - ஓர் அறிமுகம்" நூல் வெளியீட்டு நிகழ்வு.

SHARE

மோதல் தீர்வுக் கற்கைகள் - ஓர் அறிமுகம்" நூல் வெளியீட்டு நிகழ்வு.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீட அரசியல் விஞ்ஞான பேராசியர் த.கிருஸ்ணமோகனினால் எழுதப்பட்ட "மோதல் தீர்வுக் கற்கைகள்" ஓர் அறிமுகம் எனும் நூல் கலைகலாசார  பீடத்தின் சமூக விஞ்ஞானத்துறை தலைவர் எஸ்.சத்தியசேகர் அவர்களின் தலமையில் திங்கட்கிழமை (05) நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதலாவதாக  நூல் அறிமுகம் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கெனடி அவர்களுக்கு பேராசிரியர்  குணரெத்தினம் மற்றும் துறைத்தலைவர்  எஸ்.சத்தியசேகர் ஆகியோருக்கு நூலின் முதற் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தற்காலத்துக்கு தேவையான பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு நூலாக குறித்த நூல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.









 

SHARE

Author: verified_user

0 Comments: