பிறரிடம் கையேந்தும் நிலையிலிருந்து எமது மக்கள் விடுபட வேண்டும் - பசுமை இல்லத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர்.
பசுமை இல்லம் அமைப்பினால் பசுமைக் கிராமம் மாதிரி திட்ட நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியில் வியாழக்கிழமை(15) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் நாதனைக் கிராமத்தில் நடைபெற்றது.
பசுமை இல்லத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ப.கோணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்கள் பிரதம அதிதியாகக கலந்து கொண்டு பசுமைக் கிராம மாதிரித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகஸ்த்தர், இலங்கை வங்கி வெல்லாவெளி கிளை முகாமையாளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், வெல்லாவெளி பொலிஸ் நிலைய அதிகாரி, மற்றும் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நாதனை கிராமத்திலுள்ள மக்களுக்கு பயன் தரும் மா, மாதுளை, மற்றும் கத்தரி, மிளகாய், கமுகு, கறிமிளகாய், வெண்டி, உள்ளிட்ட மரக்கறிப் பயிர் கன்றுகளும், இதன்போது வளங்கி வைக்கப்பட்டன.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே வினோத்குமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…..
இலங்கையிலே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாவட்டங்களாக மட்டக்களப்பு மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டமும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை எவ்வாறு வாழ்வாதார ரீதியாக உயர்த்துவது என்ற கேள்வி எங்களிடமிருந்து எழுந்தது. அதங்கிணங்க நாம் திட்ட வரைபுகளை எழுதி சுவிஸ் நாட்டிலே வாழ்கின்ற எமது உறவுகளிடம் கையளித்ததன் பெயரில் எமக்கு அவர்கள் இத்திட்டத்திற்கு உதவிகளை நல்கி வருகின்றார்கள். அந்த வகையில்தான் பசுமை இல்லத்தினூடாக வடக்கு கிழக்கு முழுவதும் எமது மக்களை தற்காப்பு பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பவதற்கு நாம் செயற்பட்டுக் கொண்டு வருகின்றோம்.
பசுமை இல்லத்தின் கீழ் கிராமங்கள் தோறும் பசுமை கிராமியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வழங்கப்படுகின்ற பயிர் கன்றுகளையும், கிராமங்களையும், நன்கு அவதானித்து கண்காணிக்கப்பட்டும் வரப்படுகின்றன. அந்த வகையில் பசுமை இல்லத்தின் செயற்பாடுகள் முதலிடத்தில் கிளிநொச்சி மாவட்டமும், இரண்டாவது இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. நாம் இவ்வாறு வீடுகளிலே பைகளில் வைத்து தோட்டங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு பண பரிசுகளையும், மற்றும், கோழி, ஆடு, மாடு, உள்ளிட்ட ஏனைய வாழ்வாதார உதவித்திட்ங்களையும் வழங்கவுள்ளோம்.
எமது செயற்பாடளைத் தட்டிக் கொடுப்பதற்கு யாருமில்லை. வறுமையில் குடும்பமே இறந்து விட்டது என்றால் ஊடகங்கள் வந்து குவிந்துவிடும், வாழ்வாதார ரீதியாக நாம் எமது மக்களை தற்காப்பு பொருளாதார ரீதியாக மேற்கொள்ளும் உதவிகளுக்கு உந்துசக்தியளிக்க ஊடகங்களோ வேறு யாரும் உதவுவதில்லை. மாறாக ஒரு சில ஊடகங்கள் எமது செயற்பாடுகளை வெளி உலகிற்கு எடுத்துதைத்து வருகின்றன.
அண்மையில் கிளிநொச்சியில் ஒரு தாய் தனது 3 பிள்ளைகளை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் இடம்பெற்றது. இதற்கு காரணம் வறுமை. மட்டக்களப்பு மாவட்டத்திலும், அண்மைக்காலமாக நுண்டன் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இதனால் பலர் தற்கொலை செய்திருந்தார்கள். எமது பசுமை இல்லச் செயற்பாடுகளுக்கு அரச நிறுவனங்களும், பொதுமக்களும் ஆதரவு வழங்கினால் நுண்கடன் எனும் கொடிய நோயை இல்லதொழித்துவிடலாம். இந்த நுண்கடன் எமது மக்கள் மீதும், எமது மண் மீதும் திணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நுண்கடன்களால் எமது மக்களை மீண்டும், மீண்டும் வறுமைக்குட்படுத்தி, அடிமையாக்குகின்ற நிலமைதான் ஏற்படுகின்றன.
எனவே நாம் வழங்கி வரும் ஒரு பையில் நடப்படுகின்ற பயிரிலிருந்து 10 கிலோ வரையில் பறிக்கக் கூடிய கத்தரி, மிளகாய், கத்தரி, கறிமிளகாய், உள்ளிட்ட பல பயிர் கன்றுகரை நாம் வழங்கி வருகின்றோம். அதிலிருந்து மக்கள் தமது உணவுக்கா எடுத்துக் கொள்வதை விடுத்து ஏனையவற்றை விற்பனை செய்தும் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியும், அதிலிருந்து கிடைக்கும் சிறிய வருமானத்தை சேமியுங்கள், மாறாக நுண்கடன்களைப் எடுக்க வேண்டாம், நுண்கடங்கள் இரத்தம் குடிக்கும் அட்டையைப்போல் மக்களை ஊறிஞ்சிவிடும், அதனை மக்கள் விளங்கிச் செயற்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment