களுவாஞ்சிகுடியில் விசேட தேவையுடைய பிள்ளைகளை பராமரிக்கும் சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் தாக்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை(15) முதல் மாலை வேளையில்; பலத்த இடி மின்னல் முழக்கங்களுடன் பலத்த மழை பெய்து வருகின்றனது.
இந்நிலையில் இடி மின்னல் முழக்கத்தினால் வீடுகளில் மின்சானப் பொருட்களும், இலத்திரனியல் பொருட்களும் பழுதடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளை பராமரிக்கும் சிறுவர் இல்லத்தில் வெள்ளிகிழமை(16) இரவு மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் குறித்த சிறுவர் இல்லத்தின் சமையலறை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சமையலறை உபகரணங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இலத்திரனியல் மின் சுற்றும் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை. என தெரியவருகின்றது.
0 Comments:
Post a Comment