மட்டக்களப்பில் விளையாட்டு உபணங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கம் ஏற்பாடு செய்த கடினப்பந்து உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (01) மட்டக்களப்பில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பல இலட்சம் ரூபா பெறுமதியான கடினப்பந்து கிரிக்கெட் உபணங்கள் பதிவு செய்யப்பட்ட கடினப்பந்து கழகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் மேலும் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கு உதைபந்தாட்ட உபணங்களை அமைச்சர் வழங்கி வழங்கிவைத்தார.
இந்நிகழ்வில் மேலும் ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், கடின பந்து விளையாடும் பாடசாலையின் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment