31 Mar 2021

நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளில் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி.

SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளில் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு விளையாட்டு மைதானங்கள் தலா 15 ,லட்ச ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

உடனடியாக வேலைத் திட்டங்களைத் துவங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு ,ராஜாங்க அமைச்சு மாவட்டச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

அதன்படி ஏறாவூர் பக்தாத் விளையாட்டு மைதானம் காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானம் மீராவோடை அல் ஹிதாயா மைதானம் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மைதானம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு நிதியளிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று வந்தாறுமூலை டயமன்ட் விiளாயட்டு மைதானம் மண்முனை வடக்கு சீலாமுனை கிராமிய விளையாட்டு மைதானம் பட்டிருப்பு கிராமிய விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காகவும் தலா 15 ,லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு ,ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: