28 Mar 2021

சிரமதானமும் சுகாதாரப் பொருட்களும் வழங்கி வைப்பு.

SHARE

சிரமதானமும் சுகாதாரப் பொருட்களும் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையில் (28) ஞாயிற்றுக்கிழமை சிரமதானபணிகளை மேற்கொண்டதோடு அங்கு வாழும் மக்களுக்கான உலர்உணவு மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கிவைத்தனர்.

அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகபிரிவுகளில் பெண்கள் சார்ந்த வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மாணவர்களின் கல்வி சுகாதாரம் சமூக பாதுகாப்பு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்ட செயலகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள குடும்பிமலை கிராமத்தில் உள்ள குமரன் வித்தியாலயத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டதோடு அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சுகாதார பொதிகள் வழங்கிவைத்தனர்.

அத்தோடு குடும்பிமலை கிராமத்தில் இருந்து வெளி கிராமங்களில் தங்கி கல்வி கற்கும் 32 மாணவர்களுக்கும் சுகாதார பொதி வழங்கப்பட்டதோடு அக்கிராமத்தில் வாழ்கின்ற 66 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் மற்றும் சுகாதார பொருட்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களின் பிரச்சனைகள் ஆராயப்பட்டதுடன் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்படத்தோடு காணி உரிமம் தொடர்பான பிரச்சனை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பன தொடர்பான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

சட்டத்தரணியும் அருவிப்பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளருமாகிய மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அருவிப்பெண்கள் வலையமைப்பின் ஊழியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: