மண்முனைப்பற்று பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணை
ப்பு குழுக்கூட்டம் இராஜாங்க அமைச்சரும் மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் செவ்வாய்கிழமை (16) மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் மண்முனைப்பற்று பிரதேச சபை எல்லையுள் காத்தான்குடி நகரசபையின் அத்துமீறல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தல்.
காத்தான்குடி நகரசபை மண்முனைப்பற்று பிரதேசத்திற்கு சொந்தமான மைதானத்தில் செயற்படுத்தப்படுகின்ற கட்டுமான வேலைகளை நிறுத்துதல், மீறினால் காத்தான்குடி பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுத்தல்.
எல்லைநிர்ணய குழுவினூடாக மண்முனைப்பற்று, காத்தான்குடி எல்லையை தீர்மானித்து வரையறை செய்தல்.
நீண்டகாலமாக தரமுயர்த்தபடாமலுள்ள ஆரையம்பதி தளவைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கும் ஆரையம்பதி வைத்தியசாலையில் நீண்டகாலமாக பாவனையின்றியுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தினை மீளவும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளை காத்திரமான முறையிலே செயற்படுத்துவதற்குரிய பிரதேசத்திற்குரிய பல்வேறு குளங்களையும் நீரேந்துபகுதிகளையும் மீளவும் புணரமைத்தல்.
கிரான்குளத்திலும் அப்புக்காத்து குளம் மூடப்பட்டு வருவதைத் தடுத்தல்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் முந்திரி செய்கைக்காக வழங்கப்பட்ட காணியில் புதிய இனமுந்திரிகை செய்கைகளை ஊக்குவித்தல், முந்திரிகை செய்கைக்காக வழங்கப்ட்ட காணியை விற்பனை செய்யும் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துதல்.
காங்கேயனோடை, பற்றிமாபுரம் ஆகிய இரு கிராமங்களிலும் உள்ள தாய்சேய்நல பராமரிப்பு நிலையங்களை உடனடியாக புணரமைத்தல்.
செய்கைபண்ணப்படாத பயிர்காணிகளுள் இஞ்சி உளுந்து மஞ்சள் செய்கைக்காக பரிசீலனைகளை மேற்கொள்தல் உள்ளிட்ட ப தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
மண்முனைப்பற்றுபிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா சாணக்கியன் உட்பட உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைமை முகாமையளர், மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment