காத்தான்குடியில் வீடொன்றில் தீப் பரவல் - வீட்டின் உப கரணங்களும் உடமைகளும் எரிந்து நாசம்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடொன்றில் திங்கட்கிழமை (15) அதிகாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீட்டின் உப கரணங்களும் உடமைகளும் எரிந்து சேதமைந்துள்ளன.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இத தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் குடும்பத்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து உறக்கத்திலிருந்து எழும்பிய நிலையில் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
இதனால் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு, புடவைகள் கழுவும் இயந்திரம் உட்பட வீட்டு உப கரணங்கள் உடமைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
ஸ்த்தலத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிசார விசாரணைகளை மேற்கெண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment