தேற்றாத்தீவு உப்பு வெட்டிக்குளம் புனரமைப்புத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு உப்பு வெட்டிக்குளம் புனரமைப்பு செவ்வாய்கிழமை(16) மாலை இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதேச அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் பரமசிவம் சந்திரகுமார், ஆகியோர் இதன்போது கலந்து கொண்டு அபிவிருத்தி Nலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், மற்றுமு; நிர்பாசன பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment