இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் மரணித்துள்ளார்.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவனே இந்த வித மரணத்தைத் தழுவியுள்ளார்.
மிகத் திறமைசாலியான மாணவன் என பாடசாலை நிருவாகத்தால் கணிக்கப்பட்ட இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முதல் தினமே டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சமயம் சிகிச்சை பயனின்றி ஞாயிற்றுக்கிழமை 07.03.2021 இரவு மரணத்தைத் தழுவியுள்ளார்.
0 Comments:
Post a Comment