கிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, மற்றும் காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அப்பகுதி சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான கிராமத்துக்காக சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாங்காடு தனியார் மண்டபத்தில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜேசேன, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க வெல்லாவெளி உதவிப் பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன், மற்றும் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, கொக்கட்டிசோலை, காத்தான்குடி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், கிராமிய பொலிஸ் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற போதைவஸ்து விநியோகம் விற்பனை அதன் நுகர்வு, சிறுவர் துஸ்பிரயோகம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அனர்த்த முகாதைத்துவத்துவம், போன்ற செயல்பாடுகள் தொடர்பாக பிரதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
0 Comments:
Post a Comment