28 Mar 2021

செய்திகள் இணையத்தளங்களில் உடனுக்குடன் வெளிவந்தாலும் அதன் உண்மைத்தன்மைகள் பற்றி பலருக்கும் கேள்வி எழுகின்றன- கல்முனையில் சுமந்திரன் எம்.பி

SHARE

செய்திகள் இணையத்தளங்களில் உடனுக்குடன் வெளிவந்தாலும் அதன் உண்மைத்தன்மைகள் பற்றி பலருக்கும் கேள்வி எழுகின்றன. ஆனாலும். செய்திகள் அச்சுப் பத்திப்பில் வெளி வருகின்றபோது அது தொடர்பான சட்டங்கள் நமது நாட்டில் ஊறிப்போய் நிலை நிறுத்தியிருக்கின்ற காரணத்தினாலே எதனையும் அச்சிட்டு பிரசுரித்திட முடியாது. பொறுப்போடு செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்துதான் பிரசுரிக்க வேண்டும்.

என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்..சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பரிமாணம் எனும் பத்திரிகை வெளியீட்டு விழா கல்முனை கிறிஸ்தா  இல்லத்தில் சனிக்கிழமை(27) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இன்றய காலகட்டத்திலே ஊடகம் மிக மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. தற்போதைய அரசாங்கத்தில் துணிவுடன் உண்மையை எடுத்துச் சொல்கின்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. ஊடகசுதந்திரம் மீண்டும் கேள்விக்குறியாக்கப் படுகின்றது.

ஊடக சுதந்திரம் எவ்வாறு இந்த நாட்டிலே இருந்தது என்பதை 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நமக்குத் தெரிந்திருந்தது. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டும் இருந்தார்கள். இன்னும் பலர் நாட்டைவிட்டும் ஓடினார்கள். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் எந்தவித ஊடகவியலாளர்களும் தாக்கப்படவிலலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கடி சொல்கின்றார். அதில் உண்மையும் இருக்கின்றது.

ஆனால் தற்போது நிலமை மாறுகின்றது என்ற அச்சம் எழுந்துள்ளது. உண்மையான செய்தியை சரியான கோணத்துடன் வெளியிடுகின்றபோது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும். அதனை மழுங்கடிக்க முடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: