22 Mar 2021

வம்மியடியூற்றில் மாரியம்மன் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்.

SHARE

வம்மியடியூற்றில் மாரியம்மன் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்.

மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வம்மியடியூற்று கிராமத்தில் மாரியம்மன் அறநெறிப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமை(21) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வறநெறிப்பாடசாலை ஆரம்ப நிகழ்வில் வாணி வித்தியாலய அதிபர் .சந்திரகுமார், போரதீவுப்பற்றுப் பிரதேச கலாசார உத்தியோகஸ்த்தர் .பிரபாகரன், மற்றும் அறநெறிப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சமய அறக்கருத்துக்களை மாணவர்களுக்கு புகட்டுவாதற்காக அரசாங்கத்தினால் அநநெறிப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அந்த வகையில் இக்கிராமத்திலுள்ள மாணவர்கள் குறிப்பாக எமது வாணி வித்தியாலயத்தில் பயில்கின்ற அனைத்து மாணவர்களும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள அறநெறிக் கல்வியை கற்று சமூகத்திலும், சமய ஒழுக்க விழுமியங்களிலும் சிறப்பற திகழ வேண்டும் என இதன்போது கலந்து கொண்ட வாணி வித்தியாலய அதிபர் .சந்திரகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஆரம்பிக்கப்ட்டுள்ள அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடை, மற்றும் புத்தகங்கள், ஆசிரியர்களுக்குரிய சீருடை, கொடுப்பனவுகள், அனைத்தையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதில் கலந்து கெண்ட போரதீவுப்பற்றுப் பிரதேச கலாசார உத்தியோகஸ்த்தர் .பிரபாகரன் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: