16 Mar 2021

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

SHARE

போரதீவுப்பற்று  பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இனைதலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் திங்கட்கிழமை(15) மாலை வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. இதில் சமூக, பொருளாதார , கல்வி , கலாச்சார மற்றும் சுகாதாரம் சம்பந்தமான பல அபிவிருத்தி திட்டங்கள் ஆராயப்பட்டன.

எனினும் இப்பிரதேசம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களை அதிகம் கொண்டிருப்பதனால் விவசாயம் சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அதிகமாக  ஆரயப்பட்டன. அதில் குறிப்பாக தரமான விதைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது, சரியான முறையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவது, உரிய முறையில் நியாய விலையில் சந்தைப்படுத்தல்  போன்ற பல விடயங்கள் விவசாயம் சார்பாக ஆரயப்பட்டது.

அதே போன்று அப்பிரதேசங்களில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற யானை தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வன விலங்கு அதிகார சபையின் செயற்பாடுகளை விருத்தி செய்வது தொடர்பான செயற்திட்டங்கள், கால்நடை வைத்தியத்தனை மேம்படுத்துதல், மேய்ச்சல் தரை சார்ந்த விடயங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்குமான காணிகளை  நீண்ட கால குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளித்தல், அவர்களுக்கான கடன் வசதிகளை ஒழுங்கு செய்து கொடுத்தல், போதியளவு பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல விடயங்கள் கூர்ந்து ஆராயப்பட்டன.

அத்துடன் சட்டவிரோத மண் அகழ்வு முழுமையாகத் தடுத்து நிறுத்துவது தொடர்பான தீர்மானங்களும் இயற்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்ட மண் அகள்வு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான தீர்மானமும்  முன்னெடுக்கப்பட்டன.

இதில் பாராளுமனற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு உபதலைவர் .சந்திரகுமார்  பிரதேச செயலாளர்  .ராகுலநாயகி ஏனைய திணைக்களத் தலைர்கள், உட்படபிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: