நாவற்காடு நாமகள் வித்தியாலயபழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக மேற்படி பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்றயத்தினம் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்த தான முகாமில் பழையமாணவர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment