கரடியனாறு விவசாய பண்ணைக்கு சொந்தமான நிலத்தின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் கூட்டம்.
விவசாயத்துக்கு தேவையான விதை நெல்லை உற்பத்தி செய்கின்ற காரணிகளில் மிக முக்கிய தாக்கம் செலுத்துகின்ற காரணியாக கரடியனாறு விவசாயப்பண்ணை காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் இந்த பண்ணைக்கு சொந்தமான நிலங்களின் சில பகுதிகளை அங்குள்ள மக்கள் கைப்பற்றி விவசாய மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரடியனாறு விவசாய பண்ணைக்கு சொந்தமான நிலத்தின் எல்லைகளை சரியாக நிர்ணயம் செய்வதில் உள்ள பல பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுடனும் விவசாயிகளுடனும் கமநல திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரக்கூடிய வகையிலான கூட்டம் ஒன்று செவ்வாய்கிழமை(02) கரடியானாறு விவசாயக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு கரடியனாறு விவசாய பண்ணைக்கு சொந்தமான நிலத்தின் எல்லைகளை சரியாக நிருணயம் செய்வதில் உள்ள பல பிரச்சினைகள், விவசாய பண்ணையின் நிருவாக பிரச்சினைகள், தொடர்பிலும் ஆராய்தார்.
0 Comments:
Post a Comment