வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் இளைஞர் சாரணர் இயக்கம் ஆரம்பித்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அதிகஸ்டப் பிரதேசமான வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் இளைஞர் சாரணர் இயக்கம் திங்கட்கிழமை (22) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து செயற்படாமலிருந்து வந்த இளைஞர் சாரணர் இயக்கத்தை வித்தியாலய அதிபர் க.சந்திரகுமாரின் முயற்சியின் பலனாக இவ்வியக்கம் குறித்த வித்தியாலயத்தில் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிச் சாரணர் ஆணையாளர் ஆ.புட்கரன் அவர்கள் கலந்;து கொண்டு இளைஞர் சாரணர் இயக்கத்தை மீளவும் ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலை மட்டத்திலும், சமூக மட்டத்திலும், இவ்விளைஞர் சாரண மாணவர்கள் மிகவும் பற்றுறுதியுடனும், ஆர்வத்துடனும், செயற்பட வேண்டும். இவர்களுக்குத் தேவையான அனைத்துவிதமான பயிற்சிகளையும் நாம் வழங்கவுள்ளோம் என இதன்போது உதவிச் சாரணர் ஆணையாளர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment