சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் எழுச்சி பேரணி வாகரையில் இன்று இடம்பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் அக்கா குழு இரண்டாம் கட்ட தலைமுறையினர் அருவி பெண்கள் சிறுகுழு உறுப்பினர்கள் அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்களின் இணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின எழுச்சி பேரணியானது வாகரை பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய வளாகத்தில் இருந்து வாகரை சல்லித்தீவு வரை சனிக்கிழமை (07) இடம்பெற்றது
கொவிட் 19 நோய் தொற்று காலத்தில் சமத்துவமான எதிர்காலத்தை அடைவதற்கான தலைமைத்துவ பெண்கள் எனும் தொனிப்பொருளில் வாகரை பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளுடன் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின எழுச்சி பேரணியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்க்கும் வாசகங்களும், வீதி நாடகங்களும் காட்சிப்படுத்தப்பட்டு எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும்
வகையில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் எழுச்சி பேரணியில் வாகரை பிரதேச செயலக பெண்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் நவநீதனி ரமேஸ் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்
ஏ.அழகுராஜ் அக்கா குழு இரண்டாம் கட்ட தலைமுறையினர் அருவி பெண்கள் சிறுகுழு உறுப்பினர்கள்
அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment