பொலிஸாரின் கொரோனா வைரஸ் தொடர்பான செயற்பாடுகளை முகநூலில் விமர்சித்தவருக்கு விளக்கமறியல்.
ஏறாவூர் பொலிஸாரின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை முகநூலில் மோசமாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சனிக்கிழமை 06.03.2021 கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செயயப்பட்டபோது அவரை மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிஸார் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில் பாடசாலை ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது சந்தேக நபர் அந்நடவடிக்கையை முகநூல் மூலம் மிக மோசமாக விமர்சித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தார் என்பதே சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டாகும்.
0 Comments:
Post a Comment