21 Mar 2021

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது – பிள்ளையான் எம்.பி.

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளதுபிள்ளையான் எம்.பி.

தற்போது மகாணாசபையை நடத்த முடியாமலுள்ளது. அதிகாரத்தைத் தருவோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் தற்போது மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது. ஆனால்  சிங்கள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இதே அரசாங்கம் மாகாணசபையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

இன்னும் பட்டிருப்புத் தொகுதியில் மின்சாரம் இல்லாத மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வகிபாகம் கிழக்கு மாகாணத்தில் இன்னும் போததுள்ளது. வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆசனங்களைப் பெறவேண்டும்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(20) களுதாவளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

நாங்கள் வந்த பாதைகளை மறந்துவிட்டு கற்ற விடைங்களை மறந்துவிட்டு மீண்டும்  எமது இளைஞர்களைக் கூறாக்கி கிழக்கிலிருந்துதான் வடக்கிற்குச் செல்ல வேண்டும் என்ற நிலமையை யாரும் உருவாக்கிவிட வேண்டாம். மண்ணைக் காக்க வேண்டும் என்று வெற்றுக் கோசங்கள் இட்ட தலைவர்களால்தான் கிழக்கு மண்தான் மிகவும் அழிந்தது, கிழக்கில்தான் அதிக உயிர்கள் அழிக்கப்பட்டன.

பொத்துவிலிருந்து அங்கொரு காலும், இங்கொரு காலும் வைத்து சாணக்கியனும் சுமந்திரனும் 5 நாட்களில் பொலிகண்டி போனார்களாம். நாங்கள் 15 நாட்கள் உணவும் இல்லாமல் நடந்து யாழ்ப்பாணம் சென்று பல சண்டைகளைப் பிடித்து அதிலே பல உயிர்களைக் காவு கொடுத்துவிட்டுத்தான்  வந்துள்ளளோம். அவ்வாறெனில் எவ்வாறு 5 நாட்களில் அவர்கள் செல்வது.

சுமந்திரனுக்கு அவரது கட்சியில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு சாணக்கின் தம்பி உதவிசெய்கின்றார். அவ்வாறு நாங்கள் சென்றால் மீண்டும் நாங்கள் பின்னடைவைச் சந்தித்து விடுவோம் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் மிகவும் தெழிவான சமூகத்தை வளர்த்தெடுப்பதற்கு எமது செயற்படுகின்றது.

தற்போது மகாணாசபையை நடத்த முடியாமலுள்ளது. அதிகாரத்தைத் தருவோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் தற்போது மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது. ஆனால்  சிங்கள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இதே அரசாங்கம் மாகாணசபையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

எனவே தொடர்ந்து எமது கட்சி எவ்வாறு கிழக்கில் ஆட்சியைத் தக்கவைக்கின்ற இளைஞர்களாக அனைவரும் மாறவேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு ஏமாற்றியது என்பதை அவதானிக்க வேண்டும். இவ்வாறான தலைவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கையாளர்வார்கள்? கடந்த நல்லட்சி அரசாங்கத்திலே அபிவிருத்தியில் தமிழ் மக்கள் பின்தள்ளப்பட்டார்கள்.

எனவே எமது கட்சியின் பாச்சல் என்பது எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பாய்ச்சலாக இருக்க வேண்டும். அவ்வாறானவர்களைத்தான் மக்கள் மத்தியிலிருந்து தேல்தலில் களமிறக்க வேண்டும். அதற்குரிய உந்துதாலை கட்சி வழங்க வேண்டும். எனவே மக்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாங்கள்பட்ட வேதனைகளையும், கஸ்ட்டங்களையும், எமது தற்கால மக்கள் அனுபவிக்கக்கூடாது. எனவே எமது மக்களை வாழ வைக்கக்கூடிய கட்சியாக எமது கட்சியை மாற்றியாக வேண்டும். உள்ளார்ந்த ரீதியில் எவ்வாறான பிரச்சனைகள் ஏற்படினும் அவற்றைச் சரி செய்து கொண்டு முன்னோக்கிச் செல்வது என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும். அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தில் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து எமது கட்சியில் ஒருவரைத் தேர்வு செய்வதற்காக வேண்டி செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு என்பது தோற்றுப்போன கொள்கையும். கோட்பாடுமாகும். கால சூழலுக்கு ஏற்ப கொள்கையையும், கோட்பாடுகளையும் மாற்றலாம். என அவர் இதன்போது தெரிவித்தார்.



















SHARE

Author: verified_user

0 Comments: