12 Mar 2021

இரவு வேளைகளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அதிகரிக்கும் கால்நடைகளின் நடமாட்டம் – பிரயாணிகள் அசௌகரியம்.

SHARE

இரவு வேளைகளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அதிகரிக்கும் கால்நடைகளின் நடமாட்டம்பிரயாணிகள் அசௌகரியம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிரதான விதிகளின் இரவு வேளைகளில் கட்டாக்காலியகத் திரியும் கால்நடைகளால் பிரயாணிகளிப் போக்குவரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பிரயாணிகள் அங்கலாய்க்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட மட்டக்களப்பு  - கல்முனை பிரதான வீதி மற்றும், பட்டிருப்புகளுவாஞ்சிகுடி பிரதான வீதி, பட்டிருப்பு சந்தி, பகுவாஞ்சிகுடி பொதுச்சந்தைப் பகுதி,   உள்ளிட்ட வீதிகள், மற்றும் பொது இடங்களிலும், இவ்வாறு மாடுகள் கூட்டம் கூட்டம் கூட்டமாகத்திரிவதனால் வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் செல்லும் பிராhணிகளின் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பிராணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க இவ்வாறு இரவு வேளைகளில் கட்டாக்காலியாக பிரதான வீதிகளில் திரிவதனால் அப்பகுதியில் அதிகளவு வீதி விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் தமது கால்நடைகளை இரவு வேளைகளிலாவது தத்தமது வீடுகளில் அல்லது தொழுவங்களில் கட்டி வளர்க்க வேண்டும் என பொதும்ககள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்வாறு இரவு வேளைகளில் கட்டாக்காலியாக கட்டவிழ்த்து விடப்படும் கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினர் இதுவரையில் மாடுகளை கட்டாக்காலியாக விடுபவர்களுக்கு எதிரதாக தீர்க்கமான சட்டநடவடிக்கை எடுக்காமலிருப்பதுவும் தமக்கு வேதனையளிப்பதாகவும். பிரயாணிகளும், பொதுமக்களும் அங்கலாய்க்கின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: