16 Mar 2021

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்.

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம். செவ்வாய்கிழமை(16) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் பரமசிவம் சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருனாகரம்(ஜனா), இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், திணைக்களத் தலைவர்கள், துறைசார்ந்த அரச உயர் அதிகாரிகள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் விவசாயம், சுகாதாரம், கால்நடை, போக்குவரத்து, மீன்பிடி, மின்சாரம், ஏற்றுமதி, சிறுகைத்தொழில், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டு, தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதோடு, மேலும் அப்பிரதேசத்தில் மேலும் தீர்க்கப்படாமலுள்ள பிரச்சனைகள் குறித்தும், அவற்றுக்குரிய தீர்வுகள், விவரிவாய ஆராயப்பட்டன.















SHARE

Author: verified_user

0 Comments: