சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனைக்கு அமைவாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினுடையமுன்னெடுப்பின் கீழ் இலங்கை பூராகவும் 332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் சீலாமுனை யங் ஸ்டார் மைதானம் புணரமைக்கப்படவுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி ரோணி பிரின்சன், மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வே.ஈஸ்வரன் கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment