1 Mar 2021

9 தாய்மார் உரிமைகோரிய சுனாமி பேபி 81—க.பொ.த. சா.தரப் பரீட்சைக்குத் தோற்றினார்.

SHARE

9 தாய்மார் உரிமைகோரிய சுனாமி பேபி 81—க.பொ.த. சா.தரப் பரீட்சைக்குத் தோற்றினார்.

2004.டிசம்பர் 26 சுனாமி தாக்கத்தின்போது காணாமல் போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் 9 தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்ற மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த ஜெயராஸ் அபிலாஸ் திங்கட்கிழமை(01) கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார்.

தனது குருக்கள்மடம் இல்லத்தில் நிர்மாணத்துள்ள சுனாமி நினைவுத்தூபியில் இதன்போது தனது பெற்றோருடன் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்திய பின்னர்  செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை மண்டபத்திற்குச் சென்றார்.

கொவிட் 19 சுகாதார நடைமுறைமுறைகளைப் பேணி முகக்கவசம் அணந்து அபிலாஸ் பரீட்சைக்குத் தோற்றினார்.

பிறந்து 67 நாட்களே ஆன அபிலாஸ் கடலலைகளினால் அள்ளுண்டு செல்லப்பட்டு 17மணித்தியாலங்களின்  பின்னர் பாறையொன்னிறினுள் புகுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் பராமரிப்பில் வைக்கப்படடிருந்த அபிலாஸை 9 தாய்மார்கள் தனது பிள்ளையென உரிமை கோரியபோது நீதிமன்றம் சென்று டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தந்தையான ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் இன்று ஆரம்பமாகும்  க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் அதே நேரம் ஒரு வைத்தியராக வேண்டும் என்ற கனவில் அபிலாஸ் தனது கல்வியைத் தொடர்கின்றார்.

தான் அனுதிக்கபட்டிருந்த வைத்தியசாலையின் கட்டிலின் இலக்கமே 81 ஆகும் அதனாலேயே அபிலாஸ் இன்றும் சுனாமி பேபி 81 என அழைக்கப்படுகிறார்.

 













SHARE

Author: verified_user

0 Comments: