28 Mar 2021

மட்டக்களப்பில் கலை ஆற்றல் உள்ளவர்களை சமூகத்திற்குக் கொண்டு வரும் 10 மாத பயிற்சி பட்டறை.

SHARE

மட்டக்களப்பில் கலை  ஆற்றல் உள்ளவர்களை  சமூகத்திற்குக் கொண்டு வரும் 10 மாத பயிற்சி பட்டறை.

கிராம மட்டத்தில் இருக்கின்ற கலை ஆற்றலுள்ள இளையவர்களை சமூகத்திற்குக் கொண்டு வந்து  அவர்களின்  கலை  ஆற்றலை மேம்படுத்துவதற்குமான  10 மாத பயிற்சி பட்டறை  மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது .

உலக நாடக தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இது நடத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட  தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள  பயிற்சி பட்டறைக்கான  ஆரம்ப  நாள் நிகழ்வும் முன்னாயத்த விழிப்புணர்வு வீதி நாடகமும்  சனிக்கிழமை 27.03.2021 மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தில்  நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  முன்னாள் மாவட்ட உதவிப் பணிப்பாளர்  டி ஈஸ்வரராஜா  மாவட்ட இளைஞர் சேவைகள்  மன்ற  உத்தியோகத்தர் களான  வி. தர்மரட்ணம்    அருள் மொழி நிஷாந்தி  கலாராணி ஜேசுதாசன்  உட்பட  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  பிரதேச இளைஞர்  யுவதிகளும்  கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: