உதயகுமார் கல்வி நிலையத்தால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.
உதயகுமார் கல்வி நிலையத்தால் “வளர்ச்சி யின் உச்சநிலை கல்வி" எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் புதன்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.
“வளர்ச்சியின் உச்சநிலை கல்வி" எனும் தொனிப்பொருளில் உதயகுமார் கல்வி நிலையத்தினால் மட்.மமே.காயான்மடு சரஸ்வதி வித்தியாலயத்தில் மிகவும் வறுமை நிலையில் தரம் 06இல் கல்வி கற்கும் விஜயசிங்கம் சோவிதா, தரம் 09இல் கல்வி கற்கும் யோகநாதன் நிறைச்செல்வி ஆகிய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் வ.சுந்தரநாதன் முன்னிலையில் அக்னிச் சிறகுகள் தலைமை ஒருங்கிணைப்பாளரும், உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளருமான ம.ஜெயக்கொடி, பொருளாளர் திருமதி அனோஜன் விதுசா, இணைப்பாளர் க.கோபாலசிங்கம் ஆகியோரால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். உதயகுமார் கல்வி நிலையத்தின் அயராத உழைப்பு மாணவச் செல்வங்களை மேன்மேலும் கல்வியின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் பாதையை உருவாக்கிச் செல்லும் என கலந்து கொண்ட கல்விச் சமூகத்தினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment