வடக்கு கிழக்கின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் கருணா அம்மான் அமைச்சரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
ஜனதிபதி மற்றும் பிரதமர் அவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவோம் என தெரிவித்திருந்தனர். ஆகவே இதற்கான சகல ஆவணங்களும் அமைச்சரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கருணாம்மான் அவர்கள் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள் மற்றும் உறுகாம குளங்களை இணைப்பு செய்யும் விடயமும் இதன்போது அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்களும், அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிதியை கடந்த காலத்தில் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெறுவதாக திட்டம் இடப்பட்டிருந்தது கடந்த மைத்தரி, ரணில் அரசாங்கத்தின் மந்தநிலை காரணமாக முன்னெடுக்க முடியது இருந்தது. என அமைச்சரின் கவனத்திற்கு கருணா அம்மான் கொண்டு சென்றதையடுத்து, அமைச்சர் அவ்விடத்திலேயே கருணாம்மான் முன்னிலையில் வைத்து ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடி அத்திட்டத்திற்கான நிதியை பெற்றுதருவதாக கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே புதிதாக அமைக்கப்படுகின்ற கச்சேரிக்குரிய கட்டடம் இதுவரையில் முடிவுறா நிலையில் இருக்கின்றது அந்த கட்டிட தொகுதியினையும் விரைவில் கட்டி முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போத கருனா அம்மானிடம் உறுதியளித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க கடந்த ஒருவாரமாக தலைநகரிலே நின்று நான் பல அமைச்சர்களைச் சந்தித்து, தேர்தல் காலத்தில் எம்மால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் நான் முன்நெடுத்திருக்கின்றேன் என பிரதமரின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்குரிய இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவவருவதாவது….
அம்பாறை மாவட்டத்தில் பனம்பொருள் ஊடகாக சுமார் 300 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குதல், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல், கிட்டங்கி பாலத்தின் அபிவிருத்தி, கிரான் பாலம் அமைத்தல், மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்தூள் உறுகாமம் குளங்களை இணைத்தல், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய கச்சேரிக்கு நிருமாணிக்கப்பட்டுவரும் புதிய கட்டட வேலைகளை துரிதப்படுத்தல், விளையாட்டு மைதானங்களைப் புணரமைப்புக்கு 300 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்தல், வைத்தியசாலைகளின் புணரமைப்பு, வீதி அபிவிருத்திகள், சதொசவினை விஸ்தரித்தல், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு, தொடர்பில் துறைசார்ந்த அமைச்சர்களுடனும்,
கிழக்குப் பல்கலைக் கழகத்தை இந்தியாவிலிருக்கின்ற சிறந்த ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைத்துச் செயற்படுவது தொடர்பிலும், இந்திய நிதி ஒதுக்கீடுகளை வடக்கு கிழக்கில் அவிவருத்தி செய்தல், முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்தாதாரம், தொடர்பில் இந்திய துணைத் தூதுவரிடமும் எடுத்துக் கூறியிருக்கின்றேன்.
தற்போதுதான் வடக்கு கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment