வாவியில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட மஞ்சந்தொடுவாய் வாவியில் வியாழக்கிழமை(04) மாலை நீரில் மூழ்கி காணாமல் போன 24 வயது இளைஞரின் சடலம் சனிக்கிழமை(06) காலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய நிலையில் வியாழக்கிழமை(04) மாலை குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
மஞ்சந்தொடுவாய் குசைனியா பள்ளிவாயல் முனையிலுள்ள வாவியில் வலை கட்டுவதற்காகச் சென்ற குறித்த இளைஞர் படகோடு கட்டியிருந்த தோணி நீரில் அடித்துச் சென்றபோது அதனை தடுக்க நீரில் இறங்கியபோதே நீர் ஓட்டம் அதிகமிருந்ததால் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரியவந்தது.
மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த எம்.முனாஸ் என்ற 24 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போய் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதகைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment