26 Feb 2021

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விஷேட சேவை

SHARE

இம்முறை  .பொ. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு  அடையாள  அட்டை வழங்கும் விஷேட சேவை.

கிழக்கு மாகாணத்தில் இம்முறை  கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள  கிடைக்கப் பெறாத மாணவர்கள் அத்துடன் அடையாள அட்டை கிடைக்கபெற்ற அடையாள அடடைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக  மாட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு  பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  ஜி.அருணன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (26) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை, மற்றும் சனிக்கிழைமை  ஆகிய தினங்களில் 4.00 மணிவரை இச் சேவை இடம் பெறும் எனவும்  இது தொடர்பில்  065-2229449, 0719592224 தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்பு கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: