தமிழ் மொழி மூலமாக இலங்கை அதிபர் சேவை பரீட்சைக்கு தோற்றி தகைமை பெற்று நியமனம் வழங்கப்படாமலுள்ளவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் - சந்திரகாந்தன் எம்.பி உறுதிமொழி.
அரச பாடசாலைகளில் நிலவும் அதிபர் சேவை 111 வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் விண்ணப்பம் இலங்கை அரச வர்த்தமானி மூலமாக கோரி பரீட்சை நடாத்தி நியமனம் வழங்கப்பட்டது.
தமிழ் மற்றும் சிங்கள ஆகிய மொழி மூலங்களில் நிலவும் அதிபர் சேவை வெற்றிடங்களை அந்தந்த மொழி மூல விண்ணப்பதாரிகளைக் கொண்டு வேறு வேறாக நிரப்படும் என இலங்கை 2014.10.22 ஆம் திகதிய மத்திய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட் இலங்கை அதிபர் சேவை பிரமானக்குறிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் தமிழ் மொழி மூலமான வெற்றிடங்களையும் தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகளை கவனத்திற்கொள்ளமலும் சிங்கள மொழி மூலமானமானவர்களுக்கு கனிசமான அளவு நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மொழி மூலமானவர்கள் 167 பேர் மாத்திரமே நிரப்பப்பட்டனர், இலங்கை அதிபர் சேவையின் தமிழ் மொழி மூலமான விண்ணபதாரிகள் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்தோர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். தமிழ் மொழிமூலமான அதிபர் வெற்றிடத்தை நிரப்பாமல் விடுவது எதிர்காலத்தில் எமது பாடசாலை கல்வி நிர்வாகத்திலும் எமது மாகாணம் கல்வியில் பின்தங்கி செல்லும் என்பதனை தரம் பெற்ற இலங்கை அதிபர் சேவை சங்கம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் சுட்டிகாட்டினர்.
ஜனாதிபதி, பிரதமர் மத்திய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்பீரிஸ் ஆகியோர்களுக்கு இவ்விடயத்தை உடனடியாக கவனத்திற் கொண்டு தமிழ் மொழி மூலமாக இலங்கை அதிபர் சேவை பரீட்சைக்கு தோற்றி தகைமை பெற்று நியமனம் வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட விண்ணபதாரிகளுக்கான நியமனத்தை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமாகிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் தரம் பெற்ற இலங்கை அதிபர் சேவை சங்கத்திடம் உறுதியளித்துள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கை அதிபர் சேவை தகைமை பெற்ற அதிபர் சங்கத்தின் தலைவர் எம்.றோட்னி செயலளார் எம்.எச்.ரஸாம் இணைப்பாளர் எம்.எம்.ஹில்மி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment