தமிழர்களுக்குப் பிரச்சனை உள்ளது அதற்கு நாம் அரசியல்வாதிகளுடன் போசித்தான் தீர்வு காணவேண்டும் - சந்திரகுமார்.
காலம் காலமாக நாம் எதிர்ப்பு அரசியலைச் செய்து, வருகின்ற அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு அரசியலைக் காட்டி, சுதந்திர தினம் என்றால் சுதந்திரத்தைக் கொண்டாடாமல் எதிர்ப்புக்களைக் காட்டி பழக்கப்பட்ட நாங்கள் தற்போது மக்கள் பாரியதொரு மாற்றத்தைப் புரிந்து கொண்டுள்ளார்கள். அவ்வாறு மக்கள் புரிந்து கொண்டதனால்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இக்காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மவாட்ட அமைப்பாளர் பரமசிவம் நிதிரகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 வது சுதந்திரதின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை(04) நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், வட்டார அமைப்பாளர்கள், இளைஞர் முன்னணி, மகளிர் முன்னணி, விவசாயிகள் முன்னணி, கல்வி அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பெருமளவான கட்சியின் ஆதராளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்பொது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழர்களுக்குப் பிரச்சனை உள்ளது அதற்கு நாம் அரசியல்வாதிகளுடன் போசித்தான் தீர்வு காணவேண்டும். வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடபதியை மையப்படுத்திய அரசியல்வாதிகள் மட்டக்களப்பை ஒரு பகடக்காயாக வைத்துதான் இதுவரையில் செயற்பட்டிருக்கின்றார்கள். 1977 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் வந்து தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்திருந்தார். மட்டக்களப்பிலிருந்ததான் தேசியம் என்ற பதம் ஊற்றெடுத்தது. அந்த தேசியத்தை வைத்துக் கொண்டு மட்டக்களப்பை அவர்கள் பன்படுத்திக் கொள்கின்றார்கள். இதனை நாம் இன்னும் விட்டுவிட முடியாது.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் இ.பி.எல்.ஆர்.எவ். எனும் அரச சார்பான கட்சி வடமாகாணத்தில் 11 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஆனால் மட்டக்களப்பில் அப்போது தேரிதலில் போட்டியிட்ட யோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து தேசியத்தை சர்வதேசத்திற்குக்
காண்பித்தவர்கள் மட்டக்களப்பு மக்கள்தான். போராட்டத்திலும் வீரம் விளையும் மண் மட்டக்களப்பு என தெரிவித்து மட்டக்களப்பு இளைஞர்கள் விசுவமடுவில் பெரியதொரு மைதானத்தையே உருவாக்கியுள்ளார்கள். மட்டக்களப்பு மக்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றித்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழிநடாத்தியிருக்கின்றது. தற்போதுகூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற கூத்து ஒன்றை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு யாழ்ப்பாணத்தை நோக்கிப் போகவிட்டுள்ளார்கள். எப்போதும் யாழ்ப்பாணத்திலிருந்து ஆர்ப்பாட்டம் எடுத்து பொத்துவிலுக்கு வந்தது கிடையாது. எனவே மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இனிமேலாவது மட்டக்களப்பு மக்கள் விலைபோகக்கூடாது. தேசியம் என பேசிக்கொண்டு நாடாளுமன்றம் சென்றவர்கள் மற்றவர் என்ன செய்கின்றார்கள் என்பதைத்தான் கதைக்கின்றார்களே தவிர மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கின்றார்கள் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆசனங்களைத்தான் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்துள்ளார்கள் ஆனால் மட்டக்களப்பில் இன்னும் அவர்கள் யாரையும் கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை. அதிலும் எமது மக்களை அடகு வைக்கும் நாடகத்தைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் நடாத்தி வருகின்றது.
ஜெனிவாவில் தமிழர்களுக்குச் சாதமான நிலைப்பாடு தற்போது போய்;கொண்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் சரிந்த அரசியலை நிமிர்த்துவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment