2 Feb 2021

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா.

SHARE

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா.

நூற்றாண்டு பாரம்பரியம்மிக்க மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் பகவான் ராமகிருஷ்ணருக்கு எழிலூட்டப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா திங்கட்கிழமை(01) வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய கொவிட் 19 தொற்று சூழ்நிலையினை கருத்திற் கொண்டு சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கும்பாபிஷேக பூர்வாங்க கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை(31) இலங்கைக் கிளைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ் தலைமையில் ஆரம்பமாகி, கும்பாபிஷேகப் பொருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

காலை 6.00 மணிக்கு புதிய ஆலயம் இலங்கைக் கிளைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, யாக பூஜை, பஜனை மற்றும் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

இலங்கையின் மூத்த துறவியும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்  ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானந்தஜீ மகராஜ், மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தாஜீ மகராஜ், மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி  நீலமானந்தாஜீ மகராஜ் உள்ளிட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தர்களும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் சுகாதார முறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

























SHARE

Author: verified_user

0 Comments: